அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், தற்போது நெல்லின் கொள்வனவு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தங்களது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் தெரிவித்தனர்.

அத்துடன், நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயித்து விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை அரசு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.