கட்டுப்பாட்டு விலையில் பசளை, கிருமி நாசினிகளை வழங்க கோரிக்கை

Farmer vanni district Disinfectant Compost
By Ashik Jun 06, 2021 05:23 AM GMT
Report

2021ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைக்கான பசளை, கிருமி நாசினிகளின் தட்டுப்பாடுகளை நீக்கவும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சருக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவசர கடிதங்களை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நெற்பயிர்ச் செய்கையையும், உப உணவு தோட்டப் பயிர்ச் செய்கையையும் தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் வன்னி மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் காலநிலை, இயற்கை இடர்களுக்கு ஒரு புறம் முகம் கொடுத்துக் கொண்டு வரும் நிலையில் கிருமிநாசினிகள், உரம் போன்ற விவசாய உள்ளீடுகள் குறித்த காலத்துக்குல் கிடைக்கப் பெறாமையால் பல்வேறு சிரமங்களுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

2021 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும், உப உணவு தோட்ட செய்கையும் இக்கொடிய கோவிட் தொற்றுக் காலத்திலும் வன்னி மக்கள் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும், வாழ்வாதாரத்துக்காகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த கால யுத்தத்தினால் மிக மோசமான பாதிப்புக்களை சந்தித்த மாவட்டம் வன்னி என்பது உங்களுக்கு தெரியாததல்ல. இம் மாவட்ட மக்கள் அனைத்து வசதிகளுடனும், வளங்களுடனும் வாழ்ந்தவர்கள்.

இன்று கையறு நிலையில் வாழும் இந்த மக்களுக்கு இந்த விவசாயம் மட்டுமே ஓரளவுக்கேனும் கை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. ஆனாலும் உரிய நேரத்திலும், காலத்திலும் விவசாய உள்ளீட்டுப் பொருட்கள் கிடைக்காமையினால் விவசாயிகளின் தாங்கிக் கொள்ள முடியாத சுமைகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

விவசாய உள்ளீடுகளின் தட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க விலை அதிகரிப்பினாலும் அல்லற்படுகின்றனர். இன்று 1500 ரூபாய் பெறுமதியான ஒரு அந்தர் உரம் 4000 ரூபாய் தொடக்கம் 4500 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றது.

கிருமிநாசினிகள், மருந்துப் பொருட்களும் 35 தொடக்கம் 40 சதவீதம் வரையான விலை அதிகரிப்பு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

சேதன, இரசாயன பசளைகளுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்ட பிற்பாடும் இதே நிலைமை தொடர்வதை காணக்கூடியதாக இருப்பது கவலை தருகின்றது.

பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருக்கின்ற விவசாயிகள் பலன் தரக்கூடிய அறுவடையை செய்ய முடியுமா? என அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மொத்த, சில்லறை வியாபாரிகள், இடைத்தரகர்கள் அதிக இலாபமீட்டுவதையும், விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அரசின் மானிய அடிப்படையிலான உரங்கள் கூட தற்போதைய பயணத்தடை உட்பட்ட காரணங்களால் சீராக கிடைக்கப் பெறுவதில்லை. வன்னி மாவட்டத்தில் ஐம்பது சதவீத மானிய உரங்கள் கூட கமநல திணைக்களத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே இவை சம்பந்தமாக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பசளை, கிருமி நாசினிகளை பெற்றுக்கொள்ளவும் சிரமங்கள் இன்றி உரிய காலத்தில் துரித கதியில் இவற்றை பெற்றுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும் காலதாமதங்களுக்கும், விலை உயர்வுக்கும் காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுமாறும் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US