களுவாஞ்சிக்குடியில் நபரொருவர் வெட்டி கொலை
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (19.04.2026) இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டத்தில் விவசாயியான 68 வயதுடைய காசிநான் ஜெயகாந் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள விளாவெட்டுவான், நாவற்குடா பிரதேசத்தில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் இரவில் உறவினர் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மண்வெட்டி பிடியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய 19 வயது இளைஞனை 14ம் திகதி கைது செய்ததுடன் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய தங்கத்துரை ரவீந்திரா நேற்று முன் தினம் (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 17ம் திகதி இரவு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதேசத்தில் மதுபானம் குடிப்பதற்கு ஆயிரம் ரூபா பணம் தர மறுத்த தாயாரை கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயது மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் முதலாம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.