பயிர்களைப் பாதுகாக்க முயன்றபோது விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்
காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புபுதுகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
புபுதுகம பகுதியில் உள்ள வயல் நிலத்துக்குள் நேற்றுமுன்தினம்(1.11.2026) புகுந்த காட்டு யானையைத் துரத்துவதற்கு முற்பட்டபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் புபுதுகம, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய விவசாயி என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam