கருணாவின் கடவுச் சீட்டு விவகாரத்தில் சிக்குவார்களா சலே - கோட்டாபய..!
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கி பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்தில், அன்றைய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த பின்னர், அவர் தனது உண்மையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் வேறு பெயரில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டின் ஊடாக பிரித்தானியாவுக்குச் சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தைக் கையாண்ட முக்கிய நபராக அன்றைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
அக்காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்திருந்தார்.
இதேவேளை, போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து கருணா அம்மானின் கடவுச்சீட்டு விவகாரத்திலும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, இதன் பின்னணியில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கருணா அம்மானின் கடவுச்சீட்டு விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பில் ஏன் இதுவரை தெளிவான விசாரணை முடிவுகள் வெளிவரவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan