பாராட்டைப் பெற்றுள்ள முல்லைத்தீவு விவசாயி ஒருவரின் புதிய முயற்சி
முல்லைத்தீவில் (Mullaitivu) வீதியில் தேங்கிய நீரினைக் கொண்டு நிலக்கடலை பயிரிடுவதற்காக நிலத்தினை நனைத்து பயிரிட முயலும் விவசாயி ஒருவரின் முயற்சி சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொத்தியகமம் கிராமத்தில் வீதியில் ஓடிக்கொண்டிருந்த ஊற்று வெள்ள நீரை மறித்து விவசாய நிலத்தினுள் திருப்பி, அந்த நிலத்தினை நிலக்கடலை பயிர்ச்செய்கைக்கு விவசாயி ஒருவர் தயார்படுத்தி வருகின்றார்.
விவசாய செயற்பாடுகள்
நிலக்கடலை பயிரிடுவதற்காக ஆரம்ப பண்படுத்தலை முடித்துக் கொண்ட அவர் நிலக்கடலை விதைகளை நடுவதற்காக மண்ணினை நனைப்பதற்கு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மழைக்காலங்களில் நிலத்தில் தேங்கிய நீர் கோடை காலங்களிலும் ஊறிப் பாய்ந்து வீதியின் வழியே பள்ளத்தினை நோக்கி ஓடிச் செல்லும். வீணாகிப் போகும் நீரை பயனுடையதாக்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கிணற்று நீர் இறைப்பாக கொண்டு தொடர்ந்து விவசாய செயற்பாடுகளில் விவசாயி ஈடுபட்டு வருகின்றார்.
மாரி காலங்களில் நெல்லினை பயிரிட்டும் கோடை காலங்களில் நிலக்கடலை போன்ற ஏனைய பயிர்களை பயிரிட்டு வரும் வழமை கொண்டவராக இவரை ஊர் மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |