வடக்கில் கோரிக்கைகளை ஏற்காத அரசு: அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தீர்மானம்
நமது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடின் மே முதலாம் திகதியில் இருந்து அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளில் இருந்து ஒதுங்கி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராஜா விஜயரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (27.04.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய சவால்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் அவை தற்போதைய அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன.
சம்பள உயர்வுக் கொள்கை
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சம்பள உயர்வுக் கொள்கையானது, நீதியற்ற ஒரு கொள்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
