உறவுகளைத் தொலைத்து விட்டு தேடும் தமிழர்கள்! சாட்சியமளிக்கும் விசாரணை
திருகோணமலையில் (Trincomalee) காணாமல் போனோர் அலுவலகத்தினால் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சாட்சியமளிக்கும் விசாரணை நடைபெற்றுள்ளது.
குறித்த விசாரணையானது இன்று (27.04.2024) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
விண்ணப்பங்கள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும்,மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 பேர் உறவுகளுக்காக, விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை சார்பாக 16 பேரும் கந்தளாயில் 06 பேரும் மொறவெவவில் 04 பேரும் மற்றும் தம்பலகாமத்தில் 22 பேரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர், மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
