புதிய ரக ஏவுகணைகளுடன் போருக்கு தயாராகும் பிரித்தானியா
பிரித்தானியா (UK), தனது HMS Portland போர்க்கப்பலில் புதிய ரக ஏவுகணைகள் பொருத்தி போருக்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் ரோயல் நேவி கப்பலான HMS Portland (Type 23 Frigate) இல், பழமைவாய்ந்த Harpoon ஏவுகணைக்கு பதிலாக புதிய Naval Strike ஏவுகணை (NSM) அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
நோர்வேவின் Kongsberg Defence & Aerospace (KDA) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Naval Strike ஏவுகணை, கடல் மற்றும் நிலத் தளங்களில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்தது.
புதிய தொழில்நுட்பம்
அத்துடன், இந்த வகை ஏவுகணையில் உள்ள புதிய தொழில்நுட்பத்தினால் எளிதில் எதிரியினை வீழ்த்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
HMS Portland has received Naval Strike Missile fit while alongside in Haakonsvern Naval Base, Norway.
— UK Forces Tracker (@UKForcesTracker) December 12, 2024
Ship has been in and out of Haakonsvern several times yesterday and today.
(Src: MarineTraffic, src/img: @HMSPortland) pic.twitter.com/cKfHvGncEZ
மேலும், இதிலுள்ள Autonomous Target Recognition (ATR) இலக்குகளை துல்லியமாக அடையும் திறன் கொண்டதுடன் Stealth எனப்படும் மறைந்திருந்து தாக்கக்கூடிய முறையில் செயல்படம் வழகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தற்போது பிரித்தானியா உட்பட நோர்வே, போலந்து, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடற்படைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பிரித்தானியாவில் ரோயல் நேவியின் Type 23 Frigates மற்றும் Type 45 Destroyers என மொத்தம் 11 கப்பல்களுக்கு NSM அமைப்பை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரித்தானியா இந்த புதிய ஏவுகணை அமைப்பின் மூலம் தற்காப்புத் திறனை மேம்படுத்துவதுடன், நாட்டின் போர் கப்பல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |