சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை
வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகள் பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டாக்டர் அஜித் ரோஹண, தனது நீண்டகால சேவையை நிறைவு செய்யவுள்ளார்.
அவரது ஓய்வை முன்னிட்டு செப்டம்பர் 8ஆம் திகதி குருநாகல் வெலகெதர மைதானத்தில் பொலிஸ் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கௌரவ கலாநிதிப் பட்டம்
அவரது அதிகாரப்பூர்வ ஓய்வு திகதி செப்டம்பர் 11, 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 ஆண்டுகால சேவையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் DIG பதவிக்கு உயர்ந்த அதிகாரி என்ற சிறப்பையும் பெற்றார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானார்.
ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள், பொலிஸ் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கிய விளக்கங்கள் மூலம் பொதுமக்களிடம் பரவலாக அறிமுகமானார்.
2020ஆம் ஆண்டு, பொதுச் சேவைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.