காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பிரபல பாடகி நந்தா மாலினி(Photos)
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர், யுவதிகள் உட்பட மக்கள் காலி முகத் திடலில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் இன்று பிரபல பாடகி கலாநிதி நந்தா மாலினி, திரைப்பட இயக்குனரும் பாடலாசிரியருமான பேராசிரியர் சுனில் ஆரியரதன், நடிகை சுவர்ணா மல்லவாராச்சி உட்பட பிரபல கலைஞர்கள் சிலர் இன்று கலந்துக்கொண்டனர்.
சுனில் ஆரியரத்ன மற்றும் நந்தா மாலினி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நந்தா மாலினி பாடல் ஒன்றையும் பாடினார்.
கொழும்பு காலி முகத் திடலில் இன, மத பேதமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள் உட்பட பொது மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, கலைஞர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினர் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
Top artists Nanda Malini, Sunil Ariyaaratne, and Swarna Mallawaracchi join Galle Face protest campaign
— NewsWire ?? (@NewsWireLK) April 12, 2022
? Prasad Weerasinghe pic.twitter.com/7gRhmHdmqK





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
