தலைமறைவாகிய பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது: மடக்கிப் பிடித்த ஆஸி பொலிஸார்
பாரியளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகிய பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மொஸ்டபா பாலுச் ஐ (Mostafa Baluch) அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நியூசவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநில எல்லைப் பகுதியில் வைத்து குறித்த போதைப் பொருள் வர்த்தகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து பொலிஸார் ட்ரக் வண்டியொன்றுக்குள் ஏற்றிச் செல்லப்பட்ட மேர்சிடிஸ் ரக சொகுசு வாகனமொன்றிற்குள் நுட்பமான முறையில் மறைந்திருந்த நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
பாரிய போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யபட்ட நிலையில் பிணை நிபைந்தனைகளை மீறி தலைமறைவாகிய பாலுச்சை பொலிஸார் மீண்டும் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
900 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பாலுச் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.