பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டில் கொள்ளை: ஆடம்பர ஹோட்டல்களில் சிக்கிய சந்தேகநபர்கள்
கந்தானை - வெலிகம்பிட்டிய தேவாலய வீதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் நுழைந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான 27 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டியின் மெனிகின்ன, பன்வில மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் ஜாஎல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தை சந்தேகநபர்களுடன் சேர்த்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பர ஹோட்டல்களில் சிக்கிய சந்தேகநபர்கள்
வாகனத்திற்கு 14 இலட்சம் ரூபா கைப்பணமாக (குத்தகை முறையின் கீழ்) செலுத்தி 19 இலட்சத்திற்கு வாகனம் வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கமெரா காட்சிகளை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரில் முதலில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மேலதிக தகவல் கிடைத்துள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொள்ளையடித்து கிடைத்த பணத்தை செலவு செய்து அனுராதபுரம், எல்ல , நுவரெலியா ஆகிய இடங்களில் காரில் பயணம் செய்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
