இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தோட்டங்களிலும், அவ்வாறான போலியான இடங்களிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும்.
முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்
சில போலி நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு முறைகளில் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டால், மத்திய வங்கி அல்லது பொலிஸிடம் மக்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.
எனவே, மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது பயிர்ச்செய்கை உள்ளிட்ட போலி பண முதலீட்டு திட்டங்களிலோ மக்கள் பணத்தை வைப்பிலிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
