பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது
சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது.
இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளையை சேர்ந்த 43 வயதுடைய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.

தனது வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை வாட்ஸ்அப் குழு மூலம் சமூக ஊடகங்களில் பரப்பியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு உதவி செய்து, பொலிஸாரிடமிருந்து ஆதாரங்களை மறைத்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இரண்டு நபர்களும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபருக்கு பயணத்தடை
குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புக்குப் பொறுப்பான டிஐஜியின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய சந்தேகநபருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam