கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலகும் வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
"நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். பிரதமர் கல்வி அமைச்சில் இருந்து விலகும் வரை எமது போராட்டம் தொடரும்." - என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புக்கு கீழான பாடத்தொகுதிகளில் மாணவர்களுக்கு பொருத்தமற்ற இணையதள முகவரிகள் மற்றும் எழுத்துப்பிழைகள் இருப்பதாகவும் இந்தச் செயற்பாடுகள் பொருத்தமற்றவை என்றும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரியவை விலகுமாறு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,, பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி விலகுவதற்கு தயாராகி வருவதாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.