காசாவில் பஞ்சம் ஏற்படும் : ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதோடு ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அதனை கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ‘எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், வடக்கு காசாவில் விரைவில் பஞ்சம் ஏற்படும்’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்று பணிப்பாளர் கார்ல் சகாவு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவுக்கு உதவிகள் செல்வது இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதோடு காசாவின் மற்றப் பகுதிகளுக்கு மாத்திரம் சிறிய அளவான உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
