வெலிவேரிய பிரதேசத்தில் ஒமிக்ரோன் தொற்றுடன் உறுதியான குடும்பம்!
வெலிவேரிய பிரதேசத்தில் ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர்கள் இரண்டு பேர் பதிவாகியுள்ளதாக மஹர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு அறிவித்துள்ளது.
ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தில் 50 வயதான தாய் மற்றும் 25 வயதான மகள் ஆகியோருக்கு இவ்வாறு நோய்த் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பேருக்கும் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபு இவர்களுக்கு எவ்வாறு தொற்றியது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
நோய்த் தொற்று உறுதியான இருவரும் சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றி வருவதாகவும் இருவரும் பஸ்களில் பயணித்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
