புதுக்குடியிருப்பில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மல்லிக்கைத்தீவு 9 ஆம் வட்டாரம் பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப பிணக்கு காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து மனைவி வீட்டில் இருந்த எரிபொருளை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில், மனைவியினை காப்பாற்ற முயற்சித்த கணவனும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 35 அகவையுடைய கணவனும் 30 அகவையுடைய மனைவியுமான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரே எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.