கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை குடியேறிய குடும்பங்களின் புள்ளிவிபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 213 பேர் இதுவரை குடியேறி இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வையடுத்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் குடியேறியுள்ளனர்.
அதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் இதுவரை மீள் குடியேறி உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார வசதிகள் வாழ்வாதார
உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam