வவுனியாவில் வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு
வவுனியா - தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியும் அவருக்குத் துணையாகப் பிள்ளையும் இன்று வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில் குடும்பத் தலைவர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.
மனைவியும் பிள்ளையும் வைத்தியசாலையிலிருந்து வீடு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக மனைவியால் கிராம அலுவலருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிலிருந்தும் 35
ஆண் ஒருவரின் சடலம் காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



