மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தரொருவர் பரிதாபமாக மரணம்
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் குளம் வைத்தியசாலை வீதியில், மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 27 வயதான பேரம்பலநாதன் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் அவர் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன்குளம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri