விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் உயிரிழப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம்(02.11.2025) அன்று இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த நிலையில்...
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் ஓரமாக நின்ற குடும்ப பெண்மீது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதித்தள்ளியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உந்துருளியினை ஓட்டிச்சென்றவர்களும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
66 அகவையுடைய சூசைப்பிள்ளை மேரிதிரேசா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam