தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்பிக்கு வந்த கனவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தனது கனவில் புத்த துறவி ஒருவர் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க, தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சஜித்திடம் அறிவுரை
தனியார் வைத்தியசாலை ஒன்றில் இதய சத்திரசிகிச்சை ஒன்றின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் அறுவை சிகிச்சை தொடர்பில் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்து முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதன்படி, இதயத்துக்கு இரத்தத்தை வழங்கும் 3 இரத்த நாளங்களில் ஒன்று அடைபட்டதுடன் இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதைப் பாதிக்கும் பெருநாடி வால்வும் அடைபட்ட காரணத்தினால் அவர் இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அவரின் அறுவை சிகிச்சையின் போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அறிவுரை கேட்டதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க, குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அறுவை சிகிச்சைக்கு முன்னர், அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வதற்காக சில கேள்விகள் எழுப்பிய போது தான் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடரிடம் நல்ல நேரம்..
அதனை தொடர்ந்து, வைத்தியர் அது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவை நினைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இருப்பினும், அத்தநாயக்க கனவில் கொழும்பு கங்காராம கோயிலுக்கு தான் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, கனவில் அங்குள்ள மூத்த புத்த துறவி அவரின் தலையில் கை வைத்து, அறுவை சிகிச்சையை பயமின்றி எதிர் கொள்ளுமாறு கூறி ஆசீர்வதித்ததாக அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தனது அறுவை சிகிச்சைக்காக, ஜோதிடரிடம் நல்ல நேரம் தொடர்பில் கோரியதாகவும் வைத்தியர் அந்நேரத்தை மறுத்த போதிலும் சிகிச்சை காலதாமதமாகி அதேநரத்தில் இடம்பெற்றதாகவும் அத்தநாயக்க அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri