யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(19.1.2026) இடம்பெற்றுள்ளது.
அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri