கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி! மனைவி - பிள்ளைகள் படுகாயம்
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியின் புத்தல, உனவட்டுன பகுதியில் இன்று(15) காலை இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
c
விபத்தில் ஓட்டோவைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் தற்போது புத்தல பிரதேச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri