ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (06.11.2023) இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனமும், ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதி கைது
இந்த விபத்தில் ஒலுமடு நெடுங்கேணி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




