முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது.
சுதந்திரபுரம், கொலனி பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய நாகரத்தினம் சுயதீபன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர், நேற்றைய தினம்(02) தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதுடன் அதிக மது அருந்தி மயங்கிய நிலையில் நண்பர்களால் அவரது வீட்டில் விடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் விழித்துக்கொள்ளாததை அடுத்து மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அங்கு, இன்றைய தினம்(03) மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் கழுத்திலுள்ள காயம் அடையாளம் காணப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam