வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாத சகோதரர்கள்: சாவகச்சேரி குடும்பஸ்தரின் விபரீத முடிவு
வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
சாவகச்சேரி - நுணாவில், கைதடியைச் சேர்ந்த 50 வயதுடைய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் சகோதரர்கள் நால்வர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தனக்கு பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்து குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி நஞ்சருந்தியுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
பின்னர் அன்றையதினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம்(19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
