தென்னிலங்கையை பரபரப்பாக்கிய வெள்ளை வேன் - பெண் தலைமையிலான கும்பலின் செயல்
பாணந்துறையில் போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீட்டை கொள்ளையடித்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 கொள்ளையர்களை கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒரு பெண் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் ஒரு வெள்ளை வேனில் வந்து, பொலிஸாரின் சீருடைகளை போன்ற உடைகளை அணிந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டில் சோதனை
5 சந்தேக நபர்களும் வீட்டிற்குள் நுழைந்து, வீட்டை சோதனை செய்ய வேண்டும் கூறியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அப்போது, அவர்கள் வலானை ஊழல் தடுப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் வீட்டில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில், வீட்டை ஆய்வு செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வந்த வெள்ளை வேன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள், சந்தேக நபர்கள் வந்த வெள்ளை வேனை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ளை வேன்
வேனில் இருந்த நபரை விசாரித்தபோது, அவர் வீட்டில் இருந்த கொள்ளையர்களுக்கு தொலைபேசியில் இது குறித்து தகவல் அளித்தார். அதன் பிறகு கொள்ளையர்கள் வந்து உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிஸார் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் வந்த வேனுடன் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.