தமிழர் பகுதியில் கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, சந்தேகநபர், குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் அவரை மருதங்கேணி பொலிஸார் தேடிவந்துள்ளனர்.
மனைவி முறைப்பாடு
அதேவேளை, அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில், அவரது மனைவி வேறு ஒரு இடத்தில் உயிர்பாதுகாப்புக்காக தஞ்சம் கோரியுள்ளார்.
இந்நிலையில், தன்னையும் பிள்ளைகளையும் தாக்கியதாக மனைவி அளித்த முறைப்பாட்டிற்கமைய மருதங்கேணி பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் கோரிக்கை
தனது கணவன் மீது பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதால் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் உயிர்பாதுகாப்பு தேவை என மருதங்கேணி பொலிஸாரிடம் சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணவனை நீதிமன்றில் முற்படுத்துவதோடு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
