யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வான் விபத்து: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும், கடவை காப்பாளர் பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணுவில் பகுதியில் நேற்று (14.02.2024) மாலை புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கோரிக்கை
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரிடம் அப்பகுதியில் நிரந்தர புகையிரத கடவை காப்பாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புகையிரத கடவை பாதுகாப்பு கதவு இருந்தபோதும் கடவை காப்பாளர் இருப்பதில்லை எனவும், இதனால் புகையிரதம் கடந்து செல்லும் போது வீதி மூடப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் தொடருந்து வருகின்ற சந்தர்ப்பத்தில் அதனை
மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்தனர்
இந்நிலையில், சமிக்ஞை விளக்குகள், எச்சரிக்கை மணி, எதுவுமே அற்ற ஒரு புகையிரத வீதிக்கடவையாக இது காணப்படுகிறது எனவும், ஆகவே இது தொடர்பில் உரிய தரப்புக்கள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
