கிளிநொச்சி பொலிஸ் சிறை கூட்டில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் மரணம்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 65 வயதுடைய நான்கு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று நண்பகல் குடும்பத் தகராறு காரணமாக மகளை தாக்கியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதன்போது, தவறான முடிவெடுத்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஜமீல், சம்பவத்தை நேரில் பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




