கட்டுநாயக்கவில் கோடாவுடன் சிக்கிய குடும்பஸ்தர்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாது கங்கை ரம்ய தொடுபொல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 61 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஆவார்.
மேலதிக விசாரணைகள்
இந்தக் கைது நடவடிக்கையின் போது, மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 3,591,000 மில்லி லீற்றர் அளவுடைய கோடாக்கள் (19 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்கப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
