கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞன்: வெளியாகியுள்ள காணொளி
கனடாவில் (Canada), இந்தியா (India) - பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ள சிசிரிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
கனடாவின் எட்மன்டன் நகரில், டிசம்பர் 6ஆம் திகதி அன்று, குறித்த இந்திய இளைஞன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
சிசிரிவி காட்சிகள்
இதனை தொடர்ந்து, அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மயங்கிய நிலையில் மீட்கபட்ட இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
It is deeply heartbreaking to see that a 20 year old Harshandeep Singh working as a security guard in #Edmonton, lost his life in such a tragic & senseless act of violence.
— Jagdip Singh Kahlon (@jagdipskahlon) December 8, 2024
We urge authorities to ensure thorough investigations & take steps to prevent such tragedies in future. pic.twitter.com/uCokcgJ6mc
உயிரிழந்த இளைஞரின் பெயர் ஹர்ஷன்தீப் சிங் (Harshandeep Singh) என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ள சிசிரிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அதேவேளை, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான பிண்ணனி இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |