டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஏஞ்சலோ மெத்யூஸ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மெத்யூஸ்(Angelo Mathews) பெற்றுள்ளார்.
முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார(Kumar Sangakkara) மற்றும் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) ஆகியோர் முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ளனர்.
இந்தநிலையில், 37 வயதான மெத்யூஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் கிகேபர்ஹாவில் உள்ள புனித ஜோர்ஜ் மைதானத்தில், 2-வது நாள் ஆட்டத்தின் போது, நேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஏஞ்சலோ மெத்தியூஸ்
கடந்த ஒன்றரை தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இலங்கைக்காகவும் மெத்யூஸ் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
226 ஒருநாள் மற்றும், 20க்கு 20 போட்டிகளில், மெத்யூஸ் முறையே 5916 மற்றும் 1416 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், குமார் சங்கக்கார – 134 போட்டிகளில் 12400 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தன – 149 போட்டிகளில் இருந்து 11814 ஓட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ் - 116 போட்டிகளில் 8006 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
இதனை தவிர திமுத் கருணாரத்ன - 98 போட்டிகளில் 7164, சனத் ஜெயசூர்யா - 110 போட்டிகளில் இருந்து 6973, அரவிந்த டி சில்வா - 93 போட்டிகளில் 6361, தினேஷ் சந்திமல் - 86 போட்டிகளில் 5990 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |