மின்சார சபையில் குடும்ப ஆதிக்கம்! மின்பாவனையாளர் சங்கம் குற்றச்சாட்டு
இலங்கை மின்சார சபையில் குடும்ப ஆதிக்கம் நிலவுவதாக மின்பாவனையாளர் சங்கம் குற்றம் சாட்டிள்ளது.
இலங்கை மின்சார சபையில் நிலவும் முறைகேடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மின் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முறைகேடுகள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மின்சார சபையில் திறமையான அதிகாரிகள் போதுமானளவில் இருக்கின்றனர்.
அவர்களைப்புறம் தள்ளி மின்சார சபையின் உயரதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மின்சார சபையில் புதிய நியமனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத நியமனங்களை மின்சார சபை நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையேல் மின்சார சபை ஊழியர்களுடன் இணைந்து மின் பாவனையாளர் சங்கம் அதற்கெதிரான போராட்டமொன்றை முன்னெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



