தொண்டமனாறு நன்னீர் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு! வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு
தொண்டமனாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர் கடற்றொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(2.4.2026) அவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தொண்டமனாற்றை அண்மித்த பகுதிகளை நன்னீர் ஆக்கும் திட்டத்தினால் கடற்றொழில் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
குற்றச்சாட்டு
மழை காலங்களில் அச்சுவேலி, தம்பாலை உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வரும்போது அவர்கள் அந்த நீரை வெளியேற்றுவதற்காக கடலிற்குள் நீர் செல்ல கூடிய வழிவகைகளை மேற்கொள்வார்கள்.

தற்போது கடலிற்கு நீர் செல்ல முடியாதவாறு வான் கதவுகள் மூடிக் காணப்படுவதனால் விவசாயம் கூட செய்கை பண்ண முடியாதவாறு நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.இதனால் விவசாயமும் செய்கை பண்ண முடியாத நிலமை காணப்படுகிறது.
குறித்த நல்ல தண்ணீர் திட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து 1272 நன்னீர் கடற்றொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோரிக்கை
குறித்த நன்னீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை எனில் தை, மாசி, பங்குனி மாதங்களில் அதிகளவான இறால் குறைந்த விலையில் விற்பனை ஆவதாகவும் ஆனால் குறித்த திட்டம் ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்து இறால் உற்பத்தி இல்லை.

கடல் நீரும், நன் நீரும் கலக்கும் போது தான் இறால் உற்பத்தி ஆகும் என்றும் ஆறு அடைக்கபட்டமையால் நன்னீர் மீன்பிடி முற்று முழுதாக பாதிக்க பட்டுள்ளதாகவும் உரியவர்கள் கவனமெடுத்து நன் நீர் மீன்பிடியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam