கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2.4.2026) சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளானது சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது
சந்தேகநபர் நேற்று மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த சைலன்சர்களுக்குள் இருந்து 25 கிலோ 500 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான "சிவப்பு வழி" ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற போதே சந்தேகநபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு