முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 143 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன்காரணமாக, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 56 குடும்பங்களை சேர்ந்த 193 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களை சேர்ந்த 153 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை
அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (26.11.2024) மாலை வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |