சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள்! மாற வேண்டும் என்கிறார் ஜனாதிபதி
சமூக ஊடகங்களில் அதிகளவிலான தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை மாற்ற வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற 'கிராமத்துடன் உரையாடல் என்ற திட்டத்தின் 10ஆவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,
வெளியில் இருந்து பார்க்கும் போது இந்த பிரச்சினைகளை தவறாக புரிந்து கொள்கின்றனர். நான் இப்போது மீமூரேவுக்கு வருகிறேன் எனக் கூறிய போது சுற்றுச்சூழலை அழிக்க வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
அது முற்றிலும் தவறு. மீமுரே என்று அழைக்கப்படும் இந்த கிராமம் மிகவும் அழகான பழங்கால கிராமம். இந்த கிராமங்களில் வாழும் மக்கள் ஒருபோதும் கிராம சூழலை அழிக்க மாட்டார்கள்.
வெளியில் இருந்து வந்தே அழிக்கின்றனர். கிராம மக்கள் சூழலை விரும்புகிறார்கள். நாங்கள் கிராமத்தையும் கிராம மக்களையும் அழகுபடுத்த விரும்புகிறோம்.
கிராமம் அழகாக இருக்கும் போது கிராம மக்களும் அழகாக இருக்க வேண்டும்.மிகவும் கடினமாக வாழ்கின்றனர். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது சமூக ஊடகங்களில் தவறான பல விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை மாற வேண்டும். ஆனால் நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து அவர்களின் கருத்துக்களைப் பெறுகிறோம்.
கிராமத்துடன் ஒரு உரையாடல் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
