மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு மடங்காக அதிகரித்திருந்த நிலையில்,இன்று மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மரக்கறிகளை வாங்க நுகர்வோரிடம் அதிக கேள்வி இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தம்புள்ளை, தம்புத்தேகம மற்றும் கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களுக்கு இன்று அதிகளவான மரக்கறிகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,அறுவடை காலம் ஆரம்பிப்பதன் காரணமாக நாட்டில் அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை அடுத்த 10 நாட்களில் குறைந்துவிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருந்தது.
அகில இலங்கை பொருளாதார நிலைய மற்றும் கொழும்பு மெனிங் சந்தை தொழிற்சங்கம் ஆகியன இதனை தெரிவித்திருந்தது.
