வவுனியாவில் அடியோடு முறிந்து வீழ்ந்த மரம்! விபத்தில் இருந்து தப்பிய பேருந்து
வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது.
குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம் இன்று இரவு 8 மணியளவில் அடியோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக்கொண்டு ஏ9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது.
குறித்த நேரத்தில் அவ்வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரச பேருந்து ஒன்றும் பயணித்திருந்தது.
எனினும் மரம் முறிந்துவிழுவதை அவதானித்த பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு பேருந்தினை வீதியின் கரையால் செலுத்தியமையால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விபத்தினால் ஏ9 வீதியுடனான போக்குவரத்து ஒரு மணிநேரம் தாமதமடைந்திருந்தது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam