வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என பணத்தின் அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களினால் மாதாந்தம் அனுப்பி வைக்கப்படும் டொலர் தொகையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறிப்பாக கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகை 30 முதல் 50 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உண்டியல் வர்த்தகர்கள் டொலருக்கு கூடுதல் தொகையை வழங்குவதனால் இவ்வாறு சட்ட ரீதியான வழிமுறைகளில் நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்துள்ளது.
இவ்வாறு உண்டியல் முறையில் பணம் அனுப்பி வைப்பதனை தடுக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக இந்த டிசம்பர் மாதத்தில் டொலர் வருமானம் உயர்வடைந்துள்ளது என மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
