சம்பிக ரணவக்கவுக்கு எதிரான பொய்ச் செய்தி.. ஜே.வி.பி பிரமுகருக்கு எதிராக தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கு எதிராக பொய்ச் செய்தியொன்றை பரப்பிய சம்பவத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கப் பிரமுகரும், கடுவலை நகரபிதாவுமான ரஞ்சன் ஜயலால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
சம்பிக ரணவக்க, மின்சக்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கதிர்காமத்துக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது, கொழும்பில் இருந்து எண்பதினாயிரம் ரூபா செலவில் கட்டில் ஒன்று அமைச்சரின் பாவனைக்காக கதிர்காமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மின்சார சபையின் அன்றைய தொழிற்சங்கப் பிரமுகர் ரஞ்சன் ஜயலால் குற்றம் சாட்டியிருந்தார்.
நட்டஈடு
அதற்கு எதிராக சம்பிக ரணவக்க தொடர்ந்த சிவில் வழக்கில் சுமார் பதின்மூன்று வருட விசாரணையின் பின்னர் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கப் பிரமுகரும் தற்போதைய கடுவலை நகராதிபதியுமான ரஞ்சன் ஜயலால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், சம்பிக ரணவகவுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் இரகசியத்தை சொன்ன அமைச்சருக்கு சிக்கல்! வெளிநாட்டுக்கு தப்பி சென்ற முக்கிய சாட்சியாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
