விசேட தோல் நோய் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
சிறுவர்களிடையே விசேட தோல் நோய் பரவுவதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் உண்மைகள் முற்றிலும் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் போலியானது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரியவந்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவது குறித்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தோல் மருத்துவர்கள்
மருத்துவ நிலைமைகள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களால் மக்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அமைதியற்ற நிலைமைகளை ஏற்படுத்தினால் மேலும் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.