வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் கைது
வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(22.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வைத்தியர்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று குறித்த வைத்தியரின் வீட்டில் நடத்தி வந்த கிளினிக் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது குறித்த போலி வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான அனுமதி பத்திரமே வைத்தியராக அடையாளப்படுத்தும் வைத்திய அடையாள அட்டைகள் இல்லாமல் வைத்தியராக செயற்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு, குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த போலி வைத்தியராக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை பொலிஸார் கைது செய்ததுடன் அங்கிருந்த மருந்து பொருட்களான சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan