சமூக ஊடகங்களில் வெளிவரும் போலியான ஆவணங்கள்! குற்றம் சாட்டியுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயர், கடித தலைப்பு, சின்னம் மற்றும் செயலாளரின் பெயர், கையொப்பத்தைப் பயன்படுத்தி போலியான ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் பணிப்புறநடத்தப்படுவதாக இந்தப் பொய்யான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முறைப்பாடுகள் பதிவு
ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய மருத்துவர்கள் தொழிற்சங்கம் இதுபோன்ற போலி பிரசாரத்தை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் முந்தைய சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,சமீபத்திய சம்பவம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இடமாற்றம் தொடர்பான செயன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்தே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
