போலி முறைப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
போலியான முறையில் முறைப்பாடு செய்த பெண் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
பெண் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக இவ்வாறு போலி முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7ஐச் சேர்ந்த பந்துமாலி ஜயசிங்க என்ற பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் வேண்டுமென்றே போலியான தகவல்களை வழங்கி நீதிமன்றை திசை திருப்ப முயற்சித்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்;டுள்ளது.
விவகாரத்து வழக்கு ஒன்று தொடர்பில் சேவையை பெற்றுக் கொண்ட போது தொழில் ஒழுக்க விதிகளை மீறி பெண் சட்டத்தரணி செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் விசாரணைகளின் மூலம் பெண் சட்டத்தரணி தவறிழைக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
இதன் அடிப்படையில் போலியாக முறைப்பாடு செய்த பெண்ணுக்கு மூன்று லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.