இஸ்ரேலை தோல்வியடைய செய்த மொசாட் மீதான நம்பிக்கை
கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் அந்நாட்டு இராணுவம் தோல்வி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தடுக்க இஸ்ரேல் இராணுவம் தவறிவிட்டதாகவும், இராணுவம் தனக்கான பணியில் தோல்வியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று கூட இராணுவத்திற்கு தெரியவில்லை என இஸ்ரேலிய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உடனடியான பதிலடி
திடீரென தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லாததே இந்த தோல்விக்கு காரணமெனவும் கூறப்படுகிறது.
மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, போன்ற பிற அமைப்புகளின் மீது இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் கண்காணித்து வந்தது.
ஆனால் அருகில் உள்ள ஹமாஸை அது கவனிக்க தவறிவிட்டது என்று குறித்த இராணுவ அதிகாரியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
உளவுத்துறை, தடைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் அதிகமாக நம்பியிருந்ததால், ஹமாஸ் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மிகப்பெரிய போரை நடத்தியிருந்தது.
போரில் 48,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும் என கூறப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து எத்தனையோ முறை வலியுறுத்தியும் கூட நெதன்யாகு, போரை நிறுத்தவில்லை. எனினும் தற்போது இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |